20 அடி அருவாவை நேர்த்திக்கடனாக வழங்கினார். அதில் நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம் என்றும் அதனையும் பதிவிட்டு அருவா வழங்கினார்.


சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே மாரநாடு கருப்பண சுவாமி கோவிலில் நேர்த்திக் கடனுக்காக 20 அடி அருவாவை சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் வழங்கினார். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் மாரநாடு கருப்பணசாமிக்கு 20 அடி அருவாவை நேர்த்தி கடனாக அளிப்பதாக வேண்டியிருந்த நிலையில், இன்று அதனை நிறைவேற்றும் விதமாக 20 அடி அருவாவை மாநாடு கருப்பணசாமிக்கு வழங்கினார். அதில் 205664 வித்தியாசத்தில் ஜெயிச்சதை பதிவிட்டு அருவா வழங்கினார்.
