மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு மின் கட்டண உயர்வு, அனைத்து வரிகளின் உயர்வை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அமமுக மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் டேவிட் அண்ணாத்துரை தலைமையில் உசிலம்பட்டி நகர ஒன்றிய மற்றும் சேடபட்டி, செல்லம்பட்டி ஒன்றிய அமமுக நிர்வாகிகள் திமுக அரசுக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.








