• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் முருகையா கையும் களவுமாக பிடிப்பட்டார்

Byகாயத்ரி

Nov 13, 2021

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சங்குபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட பாண்டியன் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. இவரிடம் ஊராட்சி செயலாளர் முருகையா என்பவர் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் வீடு வழங்குவதற்கு 20 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக பாண்டி நெல்லை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். காவல் ஆய்வாளர் ராபின்ஞான சிங் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணையை மேற்கொண்டு இரண்டு நாட்களாக ஊராட்சி செயலாளரை நோட்டமிட்டு வந்த நிலையில் இன்று பாண்டி என்பவரிடம் ரசாயனம் தடவிய 20 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஊராட்சி செயலாளரிடம் கொடுக்கும் போது கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்ட பின் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைப்பதற்கு லஞ்ச ஒழிப்புத் துறையினர் அழைத்துச் சென்றனர்.