சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவில் மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 2.5 கி.மீ. தூரமே உள்ள சிறிய கிராமம் வாகுடி. இக்கிராமத்தை பசுமை ஊராட்சியாக மாற்றவும் , ஊராட்சியின் வருவாயை பெருக்கவும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டமான அரசின் 100 நாள் வேலை திட்டத்தை பயன்படுத்தினர்.
சாலையின் இரு புறமும் சீமை கருவேல மரக்கன்றுகளை அகற்றி 10 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்தார். அவற்றை பராமரிக்க தண்ணீர் தேவை என்பதால் பண்ணை குட்டைகள் அமைத்து அதிலிருந்தும், கிராமத்தில் உள்ள கால்வாயிலும் தண்ணீரை 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்த பெண்கள் மூலம் எடுத்து மரக்கன்றுகளுக்கு ஊற்றி பராமரிக்க செய்தார்.
இப்போது கிராமம் முழுவதும் தேக்கு, மகாகனி, வாகை, வேங்கை, கோங்கு, புளி, புங்கை, நீர் மருது, வேம்பு, பனை என அனைத்து மரங்களும் நன்கு வளர்ந்துள்ளது. வாகுடி கிராமத்திற்கு வரும் அரசு அதிகாரிகள் பசுமையான ஊராட்சியாக மாற்றிய கிராம மக்களின் முயற்சியை மனதார பாராட்டி வருகின்றனர்.
பசுமை ஊராட்சியாக மாறிய வாகுடி கிராமம்-அதிகாரிகள் பாராட்டு








