வழக்குகளிலிருந்து விடுபடவே தன்மானத்தை இழந்து டிடிவி தினகரன் பிஜேபி-யில் இணைந்துள்ளார் என்றும், அது எடுபடாது அவர் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என உசிலம்பட்டியில் தேனி எம்.பி., தங்கதமிழ்ச்செல்வன் பேட்டியளித்தார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வைத்த மக்களுக்கு தேனி மக்களவை உறுப்பினர் தங்கதமிழ்செல்வன், கிராமம் கிராமமாக சென்று நன்றி தெரிவித்து பரப்புரை மேற்கோண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேனி எம்.பி., தங்கதமிழ்ச்செல்வன்.
டிடிவி தினகரனை விட 2 லட்சத்து 80 ஆயிரம் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன், என்னை விட மோசமான ஓட்டுகளைத் தான் டிடிவி தினகரன் வாங்கியுள்ளார்.
ஆரம்பத்தில் பிஜேபி-யையும், நரேந்திர மோடி-யையும் எதிர்த்து பயங்கர அரசியல் செய்தார்., ஆனால் தற்போது அந்தர் பல்டி அடித்து கூட்டணியில் நிற்கிறார், அவர் கட்சியைவே பிஜேபி-யில் சேர்க்க போவதாக சமூக வலைதள செய்தி பார்த்தேன் எனவும், டிடிவி தினகரன் பிஜேபியுடன் சேர்ந்ததற்கு முக்கிய காரணம், ப்ரா வழக்கு, இரட்டை இலை வழக்கு என இரு வழக்கிலிருந்து விடுபட தன்மானத்தை இழந்து பிஜேபியில் சேர்ந்துள்ளார்., அது எடுபடாது அவர் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்., தண்டனைக்கு பின் அவர் வந்து கட்சியை நடத்தட்டும் பார்க்கலாம் என பேசினார்.
கடந்த ஆட்சியை விட குற்றப் பின்னணி குறைந்து தான் உள்ளது., சில சம்பவங்கள் நடந்தது வறுந்த தக்கது தான், யாரும் மறுக்க விரும்பவில்லை என்றும், தமிழ்நாடு முதல்வர் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுத்து காவல்துறையினரை மாற்றி, புதிய உத்வேகத்துடன், புதிய சட்டங்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றி கொலை குற்றங்கள் இனி நடக்க கூடாது என 100% தீர்மானமாக திமுக அரசு நடத்துகிறது., இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காது, நடந்த சம்பவங்களுக்கு வருந்துகிறேன் எனவும். சசிகலா எதற்கு சுற்றுப் பயணம் செய்கிறார் என தெரியவில்லை, அவங்க கட்சிக்குள் உள்ள பிரச்சனை, சுற்று பயணம் மேற்கொள்ளட்டும் என்ன நடக்கிறது என பார்க்கலாம் எனவும், தமிழகத்தில் இனிமேல் கொலைகள் நடக்காது என்பது தான் எங்கள் எண்ணமாக உள்ளது என பேட்டியளித்தார்.









