குமரி மைலாடி பகுதியில் திமுகவின் குடும்ப வாரிசுகளை. இளைஞர் அணியில் உறுப்பினராக பதிவு. கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ் முன்னிலையில் வீடு, வீடாக சந்திப்பு.
அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மயிலாடி பேரூர் பகுதிகளில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் பொன். ஜான்சன் தலைமை வகித்தார். அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.மதியழகன், பேரூர் செயலாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ரெ. மகேஷ் கலந்து கொண்டு இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாமினை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர்கள் மகேஷ், இளங்கோ, ஐயப்பன், முத்து, இளைஞரணி நிர்வாகி தினேஷ், கிளை செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு வீடுகள் தோறும் சென்று இளைஞர் அணிக்கு உறுப்பினர்கள் சேர்த்தனர். ஜி. பொன் ஜாண்சன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்.