• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஏழு கிலோ எடையுள்ள இரும்பு சுத்தியலை 3000 முறை டயரில் அடித்து உலக சாதனை செய்த இரும்பு பெண்மணி

BySeenu

Jul 8, 2024

கோவையை சேர்ந்த திருமணமான பெண் ஏழு கிலோ எடையுள்ள இரும்பு சுத்தியலால் இரண்டு மணி நேரத்தில் 3000 முறை பெரிய டயரில் அடித்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த திருமணமான பெண் துர்காம்பிகை. உடற்பயிற்சி செய்வதில் இவரது ஆர்வத்தை கண்ட கணவர் சபரீஷ், துர்காம்பிகையை சி குங்பூ பெடரேஷனை நடத்தி வரும் பாலன் என்பவருடன் இணைந்து பயிற்சி அளித்துள்ளார்.

வீட்டையும் தனது பெண்குழந்தையும் பராமரித்து கொண்டே கடுமையான பயிற்சிகள் மேற்கொண்ட துர்காம்பிகை உடற்பயிற்சி செய்வது குறித்த பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நூதன உலக சாதனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அதன் படி ஏழு. கிலோ எடையுள்ள இரும்பு சுத்தியலால் பெரிய டயரை 3000 முறை தொடர்ந்து அடித்து உலக சாதனை படைத்தார்.

இரண்டு மணி நேரத்தில் ஏழு கிலோ இரும்பு சுத்தியலை கொண்டு இவர் செய்த இந்த சாதனை சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

ஏழு கிலோ எடை கொண்ட இரும்பு சுத்தியலை லாவகமாக பிடித்த இரும்பு பெண்மணி துர்காம்பிகை இரண்டு மணி நேரம் தொடர்ந்து இரும்பு அடித்ததை அங்கு கூடியிருந்த பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் கண்டு வியந்தனர்.

இது குறித்து அவர் கூறுகையில்,உடற்பயிற்சி என்பது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் தற்போது அவசியம் என்பதை வலியுறுத்தும் விதமாக தாம் இந்த சாதனையை செய்ய முன் வந்ததாகவும்,எனது இந்த முயற்சிக்கு எனது கணவர் சபரீஷ் மற்றும் பயிற்சியாளர் பாலன் ஆகியோர் அளித்த ஊக்கமே தமது இந்த சாதனைக்கு காரணம் என பெருமிதம் தெரிவித்தார்.

ஏழு கிலோ எடையுள்ள சுத்தியலை தூக்குவதே கடினம் என்ற நிலையில் அதனை கொண்டு 3000 முறை தொடர்ந்து டயர் மேல் அடித்து ஒரு பெண் செய்த சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.