• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

SR பிரபாகரன் தயாரித்து இயக்கும் “றெக்கை முளைத்தேன்” திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்!

Byஜெ.துரை

Jul 5, 2024

தான்யா ரவிச்சந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க,SR பிரபாகரனின் ஸ்டோன் எலிஃபேண்ட் கிரியேஷன்ஸ் எனும் நிறுவனம் தயாரிக்கும் “றெக்கை முளைத்தேன்” திரைப்படத்தை கடந்த வாரம் பார்த்த தணிக்கை குழுவினர் – படத்தை இன்றைய இளைஞர்களுக்கான திரைப்படம் என பாராட்டி U/A சான்றிதழ் வழங்கினர்.

இது குறித்து இயக்குனர் SR பிரபாகரனிடம் கூறியது….

நான் சொந்த நிறுவனம் துவங்கி தயாரிக்கும் முதல் திரைப்படம். எனது முதல் தயாரிப்பு என்பதால் நான் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறேன்.
படம் முழுக்க முழுக்க கல்லூரி இளைஞர்களுக்கானது. படத்தின் மிக முக்கிய கதா பாத்திரத்தில் கிரைம் பிராஞ் அதிகாரியாக “தான்யா ரவிச்சந்திரனும்“ மற்ற முக்கிய கதாபாத்திரத்தில் ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன், கஜராஜ், ஜீவாரவி, மீரா கிருஷ்ணன்,நடிக்க ஐந்து புதுமுகங்களை அறிமுகம் செய்கிறேன்.

பின்னணி இசையை தரண்குமார் அமைக்க பாடல்களுக்கு தீசன் இசையமைக்க, கணேஷ் சந்தானம் ஒளிப்பதிவில், பிஜு டான் போஸ்கோ படதொகுப்பு செய்ய ,கார்த்திக்துரை நிர்வாக தயாரிப்பு செய்ய, மக்கள் தொடர்பு ஷேக் கவனித்து கொள்ள,இணை தயாரிப்பாளராக A.முனிஸ்வர்,K.தீரா இணைய எனது Stone Elephant Creations நிறுவனம் தயாரிக்கும் “றெக்கை முளைத்தேன்“ திரைப்படத்தின் First Single விரைவில் வெளிவரும் என்றார்