ஜூலை மாதத்தின் தொடக்க நாளான இன்று வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.31 குறைக்கப்பட்டு 19 கிலோ எடை கொண்ட வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.818.50க்கு விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலையை எண்ணைய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் இந்த மாதமும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்து உள்ளன.
அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 31 ரூபாய் குறைந்து ரூ.1809.50-க்கு (கடந்த மாதம் 1840.50) விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ.100 குறைக்கப்பட்ட நிலையில், இம்மாதம் எவ்வித மாற்றமும் இன்றி ரூ.818.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை கடந்த சில மாதங்களாக குறைக்கப்பட்டு வருகிறது. இந்த விலை குறைப்பு வணிகர்கள், உணவக உரிமையாளர்கள் ஆகியோர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






; ?>)
; ?>)
; ?>)
