காரியாபட்டியில் லயன்ஸ் கிளப் துவக்க விழா – புதிய நிர்வாகிகள் பதவி யேற்பு காரியாபட்டி – ஜூலை.1 காரியாபட்டி யில் லையன் ஸ் கிளப் துவக்க விழா நடை பெற்றது. லயன்ஸ் கவர்னர் பிரான்சிஸ் ரவி தலைமையில் வகித்தார். முன்னாள் கவர்னர் முகமது அலி முன்னிலை வைத்தார் மண்டல தலைவர் ஆடிட்டர் கிருபாகரன் வரவேற்று பேசினார். காரியாபட்டி லையன்ஸ் கிளப் பிற்கு தேர்ந் தெடுக்கப் பட்ட புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப் பட்டது. புதிய நிர்வாகி கள
கிளப் அட்மின் விவேகானந்தன், தலைவராக அழகர்சாமி செயலாளராக விக்டர், ஆரோக்கியராஜ். பொருளாள ராக ராமசாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். மேலும் கிளப் துணைத் தலைவர்களாக ஜெயப்பிரகாஷ், தாமோதரக்கண்ணன், துணை செயலாளர் மணிகண்டன், துணை பொருளாளர் சிவக் குமார் மற்றும் பல்வேறு துறை தலைவர்களாக செந்தில்குமார் பொன்ராம்,, திருநாவுக் கரசு, ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்..
விழாவில் அருப்புக்கோட்டை லைன்ஸ் கிளப் தலைவர் டாக்டர். ராஜாராம், செயலாளர் கிருஷ்ண குமார், பொருளாளர் ஓம்ராஜ், நிர்வாகிகள் குருசாமி, முத்து வேல், வீரராஜன். ஆகியோர் சிறப்பு விருந்தினர் களாக பங்கேற்று வாழ்த்தி பேசினார் கள். நிகழ்ச்சியை முன்னிட்டு மரக்கன்றுகள் நடுதல், உண்டு உறைவிடப் பள்ளிக் குழந்தை களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கள் நடைபெற்றது.
காரியாபட்டியில் லையன்ஸ் கிளப் துவங்கப்பட்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமானம் செய்து வைக்கப் பட்டது.
