• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கனமழையால் தத்தளிக்கும் டெல்லி : பொதுமக்கள் அவதி

Byவிஷா

Jun 28, 2024

டெல்லியில் நேற்று விடிய விடிய பெய்த கனமழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வருகின்றனர்.
தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெப்ப அலை வீசி வந்தது. 42 டிகிரி வரையிலும் வெப்பம் சுட்டெரித்ததால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில் நேற்று முதல் டெல்லியில் பரவலாக பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது. புதுடெல்லி, நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக டெல்லி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு, சிறு விபத்துகளும் அதிகரித்துள்ளது. பொதுமக்கள் கடும் சிரமத்திற்கிடையே அன்றாட பணிகளுக்காக சென்று வர வேண்டிய நிலை நீடித்து வருகிறது. தொடர் மழை காரணமாக டெல்லி விமான நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்திற்கு உள்ளானதில் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் டெர்மினல் ஒன்றில் விமானத்திற்காக காத்திருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.