குமரி காந்தி மண்டபம் முன்பிருந்து உலகப்போதை விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் ஆட்சியர் ஸ்ரீதர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் திங்கள் 26_ம் நாள் உலகப்போதை விழிப்புணர்வு தினமாக அனுஸ்டிக்கப் படுகிறது. சர்வதேச சுற்றுலா பகுதியான கன்னியாகுமரி தேசப்பிதா அண்ணல் காந்தி நினைவு மண்டபத்தின் முன்பிருந்து, கன்னியாகுமரி புனித அந்தோனியார் மேல் நிலப்பள்ளி மாணவர்களின் ஜோதி ஓட்டத்தை கோட்டார் மறை மாவட்டத்தின் சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்பணி நெல்சன், கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா தேவாலயத்தின் பங்கு தந்தை அருட் பணி உபால்ட், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், வார்ட் உறுப்பினர்கள், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா இ.ஆ.ப., மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள்,குமரி மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை ஆகியோர் பங்கேற்ற நிகழ்வில் போதை விழிப்புணர்வு கை ஏட்டை வெளியிட்டும், மாணவர்கள் பங்கேற்ற ஜோதி ஓட்டத்தின் டார்ச்சில் ஒளி ஏற்றியும்,கொடி அசைத்து, குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.


குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி முதல், மாவட்ட எல்லையான களியக்காவிளை வரை 11_இடங்களில் உலகப்போதை விழிப்புணர்வு தினம் அனுஷ்க்கப்படுகிறது. குமரி மாவட்ட தலைநகர் நாகர்கோவில் நடக்கும் போதை தடுப்பு விழிப்புணர்வு ஓட்டத்தை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.