சிவகங்கை சாம்பவிகா பள்ளியில் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர்களை பாராட்டி மாலை அணிவித்து மரியாதை செய்து கவுரவித்த பள்ளி தாளாளர் .
கடந்த கல்வியாண்டில் 10-ம் வகுப்பு, பிளஸ்2 தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற வைத்த அரசு, உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் புனித மைக்கேல் பொறியியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் தலைமையில் பாராட்டு விழா நடந்தது.

பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். தமிழரசி எம்எல்ஏ, முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சாம்பவிகா பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்குப் பாராட்டுச் சான்றுகள், கேடயங்களை வழங்கினார்.

சிவகங்கை சாம்பவிகா பள்ளி ஆசிரியர்களை பாராட்டும் விதமாக சாம்பவிகா பள்ளியின் தாளாளர் சேகர் அனைத்து ஆசிரியர்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தார் அதன் பின் ஆசிரியர்களிடம் பேசும்போது பள்ளி தொடங்கிய காலம் முதல் இன்று வரை நான் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தொடர்ந்து 100% தேர்ச்சி பெற்று வருகிறோம் மேலும் படிப்பில் மட்டுமல்லாமல் விளையாட்டு துறையிலும் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது இதற்கெல்லாம் ஆசிரியர்கள் நீங்கள் தான் காரணம் என்றும் நம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிறப்பாக பாடங்களை நடத்தி தொடர்ந்து நம் பள்ளி முதலிடம் பெறுவதற்கு பாடுபட வேண்டும் என ஆசிரியர்களிடம் கேட்டுக் கொண்டார்.
