• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

குமரி மாவட்டம் தேங்காய்பட்டணம், புத்தன்துறையில் இருந்து வேளாங்கண்ணி கோவில் நோக்கி நடை பயணம்

வேளாங்கண்ணி மாதா கோவில் நடை பயண பக்தர்கள் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம், புத்தன் துறையில் இருந்து வேளாங்கண்ணி கோவில் நோக்கி நடை பயணம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு இன்று கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க கழக செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான N.தளவாய்சுந்தரம் Bsc, BL ஏற்பாட்டில் தோவாளை தெற்கு ஒன்றிய கழக செயலாளரும், ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவருமான C.முத்துக்குமார் தலைமையில் காலை, மதிய உணவை ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் தேவாலயத்தில் வைத்து வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி சட்டமன்ற அ தி மு க உறுப்பினர் தளவாய் சுந்தரம் சட்டமன்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டிருப்பதால். அவர் நேரில் பங்கேற்கவில்லை.

இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட கழக இணை செயலாளரும்,தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவருமாகியசாந்தினி பகவதியப்பன் அவர்கள்,குமரி மேற்கு மாவட்ட கழக மீனவரணி செயலாளர் ஜோஸ் அவர்கள், ஆரல்வாய்மொழி பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜெனட்சதீஷ்குமார், மணி மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.