மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மதுரை மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து வாக்களித்ததற்கு நன்றிகளை பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்வில் மதுரை மாநகர துணை மேயர்,மதுரை மாவட்ட சிறுபான்மை நலக்குழு உறுப்பினர்கள், மதுரை மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகளும் கலந்து கொண்டு தேர்தலில் வெற்றி பெற்றதற்கு தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.அதோடு இஸ்லாமியர்கள் இறந்தால் புதைப்பதற்கு இடமில்லை இடம் வேண்டுமென்ற கோரிக்கையை நீண்ட ஆண்டு காலமாக மனுவாக கொடுத்து வருகிறோம் நடந்த பாடில்லை எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுங்கள் என்று மதுரை எம்.பி சு.வெங்கடேஷிடம் கேட்டுக்கொண்டனர்.அதோடு அடிப்படை வசதிகள் சிலவற்றை செய்து தரக்கோரியும் கேட்டுக்கொண்டனர்.







