• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி சிவகங்கை வீரர் அசத்தல்:

ByG.Suresh

Jun 19, 2024

வாக்கோ இந்தியா சார்பில் ஜூனியர் நேஷனல் கிக் பாக்ஸிங் போட்டி- 2024 மேற்குவங்கம் மாநிலம் ,சிலிகுறி மாவட்டத்தில் 10/06/24 to 14/06/24 முதல் நடைபெற்றது, இதில் 27 மாநிலங்களில் இருந்து 611வீரர் மற்றும் வீராங்கனைனர் பங்கேற்றனர், இதில் தமிழகத்திலிருந்து 45 வீரர்கள் மற்றும் வீராங்கனைனர் தலைமை பயிற்சியாளர் சுரேஷ்பாபு தலைமையில் பங்கேற்றனர், இப் போட்டியில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து தமிழ்நாடு அணி சார்பாக பங்கேற்ற இடையமேலூர் அரசு பள்ளி மாணவன் 11ஆம் வகுப்பு பயிலும் நா.வசந்தன் ஜூனியர் -67 இடை பிரிவில் ரிங் போட்டியில் திறம்பட விளையாடி வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார், போட்டிகளின் முடிவில் தமிழ்நாடு கிக்பாக்ஸிங் அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்று முதல் இடத்தை தட்டி சென்றது, தொடர்ந்து வெற்றிகளை குவிக்கும் தமிழ்நாடு கிக்பாக்ஸிங் அணிக்கு அரசு தரப்பில் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன, மேலும் சிவகங்கை வீரர் வசந்தனின் தொடர் வெற்றியைக் கொண்டாடும் வகையில் சிவகங்கை மாவட்டம் திரும்பிய வசந்தனுக்கு இடையே மேலூர் பேருந்து நிலையத்தில் இடையமேலூர் ஊர் மக்கள் சார்பாகவும் மாணவர்கள் சார்பாகவும் வெடி வெடித்து மாலை மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது மாணவருக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர்கள் குணசீலன் சித்ரா தீனதயாளன் ஆகியோருக்கும் ஊர் மக்கள் சார்பாக பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.