• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்கள் சந்திப்பு

BySeenu

Jun 14, 2024

கோவை குனியமுத்தூரில் உள்ள பொதிகை இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பிரச்சனைகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி:-

தேயிலை தோட்ட தொழிலார்கள் வாழ்வாதாரம் காக்க வேண்டும்.மாஞ்சோலை தொழிலாளர்களிடம் கட்டாயம் கையெழுத்து வாங்கி , இருப்பிடத்தை விட்டு காலி செய்ய திட்டமிட்டு வருகின்றனர்.
பிபிடிசி நிறுவன ஒப்பந்தம் 2028ம் ஆண்டு முடிவடையதாக கூறி விருப்ப ஓய்வு கடிதத்தை வாங்கி வருகிறார்கள்.தொழிலாளர்களின் அத்தியாவசிய தேவைகளை துண்டித்து வருகின்றனர். தொழிலாளர் சட்டவிரோத செயல் நடைபெற்று வருகிறது. இது குறித்து முதல்வர் கவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளேன். அரசியல் கட்சியினர் இந்த பிரச்சனையை கையில் எடுக்க வேண்டும். முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு செய்து தொழிலாளர்கள் காக்க வேண்டும். தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிந்தாலும்,தமிழக தேயிலை தோட்டம் கழகமே எடுத்து நடத்த வேண்டும்.
வருகின்ற சட்டமன்ற கூட்ட தொடரில் இது குறித்து விவாதிக்க வேண்டும் எனவும் இது குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர் கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளேன்.