தேனி – மதுரை மெயின் ரோடு மேம்பாலம் நடைபெற்று வரும் பகுதியில் குண்டு குழிவாக உள்ள சாலையை போர்க்கால அடிப்படையில் செப்பணிட வலியுறுத்தி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியும், புரட்சிகர சோசிலிஸ்ட் கட்சியும் இணைந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்டப்பொறியாளர்- தேனி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர்.
தேனி-மதுரை சாலை அரண்மனை புதூர் விளக்கு பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் சாலைகள் அமைக்கு பணிக்கு தோண்டப்பட்டு குண்டு குழியுமாக உள்ளது,
மேலும் முறையான இணைப்பு சாலைகள் அமைக்கப்படாததால் சாலையில் வாகனத்தில் பயணிக்கும் பொதுமக்கள் கர்ப்பிணிகள், அவசரசிகிச்சை, வாகனங்கள் என அனைவரும் கடும் அவதிப்படுகின்றனர்.
விபத்து ஏற்படுவதை தடுக்க போர்க்கால அடிப்படையில் சாலையை செப்பணிடவும் வலியுறுத்தி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியும் புரட்சிகர சோசிலிஸ்ட் கட்சியும் இணைந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்டப்பொறியாளர்- தேனி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர்.