தேனி மாவட்டம், போடி தாலுகா, பொட்டிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட விவசாய நிலங்களில் அத்துமீறி கனிம வளங்கள் தினந்தோறும் கொள்ளையடிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
பொட்டிபுரம் ஊராட்சிக்குட்பட்ட ராமகிருஷ்ணா புரம் முதல் முத்தையன் செட்டியபட்டி சாலையில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் இரவு நேரங்களில் கனிம வளங்கள் ஜேசிபி, ஹிட்டாச்சி, உள்ளிட்டை கனரக வாகனங்களை வைத்து கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.
இதனால் ஊராட்சிக்கு சொந்தமான கிராம சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் முற்றிலும் சேதம் அடித்து வருகிறது.
எனவே பொட்டிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதும் கனிம வளங்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால் கனிம வளங்கள் தினந்தோறும் விவசாய நிலங்களில் கொள்ளை அடிக்கப்படுகிறது.
இது குறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.