2.75 கிலோமீட்டர் தொலைவிற்கு ரூபாய் 90 லட்சம் செலவில் தரமற்ற முறையில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தேனி மாவட்டம் போடி தாலுகா பொட்டிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தரமற்ற முறையில் பழைய மண் சாலை மீது சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
பொட்டிபுரம் ஊராட்சிக்குட்பட்ட ராமகிருஷ்ணா புரம் முதல் முத்தையன் செட்டியபட்டி வரை சுமார் 2. 75 கிலோமீட்டர் தொலைவிற்கு ரூபாய் 90 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த சாலை தரமற்ற முறையில் மண் மீது தார் ஊற்றி மட்டும் தற்போது சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக பொதுமக்களும் விவசாயிகளும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இது குறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.








