• Thu. Sep 25th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

திட்டமிட்டபடி 14-ந் தேதி மெகா தடுப்பூசி முகாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Byமதி

Nov 11, 2021

சென்னை அயப்பாக்கத்தில் உள்ள ஐ.சி.எம்.ஆர்.-ல் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம், நடமாடும் மருத்துவ முகாம், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை மூலம் நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர் வழங்குதல் மற்றும் கொசு ஒழிப்பு பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்திருக்கின்ற சூழலில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால், பாதுகாப்பு மையங்கள் திறக்கப்பட்டு, அங்கு மக்களுக்கு போதுமான மருத்துவ வசதிகள் ஏற்பத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களில் 1,858 இடங்களில் மருத்துவ முகாம்கள் மற்றும் 965 நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 74 ஆயிரத்து 283 பேர் பயனடைந்துள்ளனர். தமிழகத்தில் மேலும் கூடுதலாக நேற்று 400 நடமாடும் மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன. 750 வாகனங்கள் மூலமும் மருத்துவ முகாம்கள் நடந்து வருகிறது. அந்தவகையில் 1,150 நடமாடும் மருத்துவ முகாம்கள் செயல்பட தொடங்கி உள்ளன.

கொரோனா தடுப்பூசியை பொறுத்தவரை அரசின் சார்பில் 5 கோடியே 73 லட்சத்து 30 ஆயிரத்து 450 பேருக்கும், தனியார் ஆஸ்பத்திரிகளின் சார்பில் 26 லட்சத்து 82 ஆயிரத்து 556 பேருக்கும் என மொத்தம் 6 கோடியே 13 ஆயிரத்து 6 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 71 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 2-வது தவணை தடுப்பூசி 32 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதிக்குள் 100 சதவீதம் தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி தமிழகம் சென்றுகொண்டிருக்கிறது. 8-வது தடுப்பூசி முகாம் வருகிற 14-ந் தேதி நடைபெறுகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்திருந்தாலும் மெகா தடுப்பூசி முகாமை நடத்தியே தீர வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கிறோம்’ என்று அவர் கூறினார்.