• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவி ஏற்றது முதல் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பேட்டி

BySeenu

Jun 6, 2024

அதிமுக கொரடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி வேலுமணி செய்தியாளர்களுக்கு இன்று கோவை அதிமுக அலுவலகத்தில் பேட்டி அளித்தார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.கடந்த பல தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்திருந்தாலும், அடுத்து பல வெற்றிகளை பதிவு செய்துள்ளது என்றார்.கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 19.3% வாக்குகள் அதிமுக பெற்றது என குறிப்பிட்ட அவர், இந்த தேர்தலில் 20.4 சதவீத வாக்குகள் பெற்று வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது என குறிப்பிட்டார்.மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அதிமுக அரசி செயல்படுத்தி உள்ளது எனக் கூறிய அவர் தொடர்ந்து மக்கள் நலனில் அக்கறை கொண்டு அதிமுக செயல்படும் என்றார். அண்ணாமலை பாஜக தலைவர் ஆனது முதல் தான் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு, பிளவுற்றுள்ளது என் குற்றம் சாட்டினார். பாஜக அதிமுகவுடன் இணைந்து போட்டியிட்டு இருந்தால் 30 முதல் 35 இடங்களை வென்றிருக்க முடியும் என்றார்.
அண்ணாமலை ஊடக பலத்துடனும், பணம் செலவு செய்தும் தோல்வியடைந்துள்ளார் என்றார்.மத்தியில் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்த உடன், அண்ணாமலை தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் அதிமுக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.