கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில், இந்திய பிரதமரின் 45 _மணி நேர தியானத்தின் மூன்றாவது தினமான இன்று (ஜூன்_1)ல். பிரதமர் அதிகாலையே எழுந்து சூரியன் உதிக்கும் காட்சியை கண்டு வணங்கியவர் பாறையில் சிறிது நேரம் நடை பயிற்சி மேற்கொண்டார்.
பிரதமரின் 45 மணி தியானத்தின் பெரும் பகுதி நேரத்தை கடந்து வந்து விட்ட நிலையில், இனியும் எஞ்சிய 6மணி நேரங்களே உள்ளது.
இந்தியாவின் 7வது கட்ட தேர்தல், 57 தொகுதிகளில் வாக்கு பதிவு தொடங்கிய காலை மணி 7_யின் போது பிரதமர் நரேந்திர மோடி. குமரி பகவதியம்மன் ஒற்றை காலில் தவம் செய்த பாதமண்டபத்தில் உள்ள கால் பாதத்தின் வடிவத்திற்கு மலர் தூவி பிரார்த்தனை மேற்கொண்டார்.
தியானம் நிறைவு செய்யும் நேரம் நொடி,நொடியாக கடக்கும் நேரத்தில், கரை பகுதியில் காவல் துறை கண் காணிப்பை அதிகப் படுத்தியுள்ள நிலையில், இன்று(ஜூன்_1) சுற்றுலா பயணிகள் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு அனுமதிக்கப்படுவது பற்றியதான அதிகாரிகளின் நிலைப்பாடு தெரியவில்லை.
பிரதமர் தியானத்தை நிறைவு செய்தபின் உடனடியாக, கடந்த இரண்டு நாட்களாக சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் இருந்து வான் உயர் திருவள்ளுவர் சிலையை தரிசித்த பிரதமர் நரேந்திர மோடி திருவள்ளுவர் சிலை பாறைக்கு படகில் சென்று திருவள்ளுவரின் சிலை கால் தங்களுக்கு மலர் தூவி வணங்கி மூன்று கடல் பரப்பில் இருந்து விடைபெற்று படகு மூலம் கரை திரும்புகிறார்.
கன்னியாகுமரியில் உள்ள தேசப்பிதா அண்ணல் காந்தியடிகளின் நினைவு மண்டபத்திற்கும் செல்ல இருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல் ஒன்று பரவுகிறது,இதைப்போன்றே, விவேகானந்தர் நினைவு மண்டபம்- ஹெலிகாப்டர் தளம் வரையிலான சாலையில் பிரதமர் நடந்து சென்று சாலையின் இரண்டு பகுதிகளில் நிற்கும் மக்களை பார்த்து “கை” அசைத்தவாரே சென்று கன்னியாகுமரியிலிருந்து விடைபெறும் திட்டம் உள்ளது. இது குறித்து அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் முடிவு என்ன என்பது அறிவிக்கப்படவில்லை.
பிரதமரின் கன்னியாகுமரி வருகை உள்ளூர் வியாபாரிகள் குறிப்பாக மீனவர் 4நாட்களாக கடலுக்கு செல்ல தடை விதித்ததில்,குமரி மாவட்டத்தில் உள்ள 47_மீனவ கிராமத்தில் உள்ள ஒட்டு மொத்த மீன் பிடித்தல் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுலா பயணிகள் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு நிலைகளில் காவல்துறையால் அலக்களிக்கப்பட்டது போல். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து செய்தி சேகரிக்க வந்த பத்திரிகை,ஊடகவியலாளர்கள், கன்னியாகுமரியில் எந்த பகுதியிலும் புகைப்படம், மற்றும் காட்சி ஒளிப்பதிவு செய்ய முடியாத காவல்துறை நடவடிக்கை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கன்னியாகுமரி வந்த அனைத்து நிலை பத்தியிகையாளர்களையும் முகம் சுழிக்க செய்த காவல்துறையின் செயல் பாடாக இருந்தது.