எதற்காக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ், ADSP வெள்ளத்துரை தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்தார் தெரியுமா?
சந்தனக்கடத்தல் வீரப்பன், மதுரை ரெளடிக்கள் மற்றும் சென்னை பிரபல தாதா அயோத்தி குப்பம் வீரமணி உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்டோரை ‘என்கவுண்டர்’ செய்த ஸ்பெஷலிஸ்ட் ஏ.டி.எஸ்.பி வெள்ளத்துரை இன்று காலை பணி ஓய்வு பெறும் நிலையில் மாலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த காவல்துறை வட்டாரத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த செய்திஅனைத்து மீடியாக்களிலும்,சமூக ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாகவே இருந்து வந்தது.

2013-ம் ஆண்டு சிவகங்கை காவல் நிலைய கைதி உயிரிழந்த வழக்கில், இந்த வழக்குக்காக இன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.


இந்நிலையில், சி.பி.சி.ஐ.டி வழக்கில் இன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வெள்ளத்துரை, தன் மீது தவறு எதுவும் இல்லை என கொடுக்கப்பட்ட விளக்க அறிக்கையை கொடுத்த நிலையில், வெள்ளத்துரை மீதான சஸ்பென்ட் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் உத்தரவிட்டுள்ளார்.
