• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில் சட்டபணிகள் குழு சார்பில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த நீதிபதி

ByP.Thangapandi

May 31, 2024

உசிலம்பட்டியில் சட்டபணிகள் குழு சார்பில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த நீதிபதி.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கவுண்டன்பட்டி ரோட்டில் உள்ள உசிலம்பட்டி நீதிமன்ற வளாகத்தில் ஐகோர்ட் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆலோசனையின் படி வட்ட சட்டபணிகள் குழு சார்பில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை உசிலம்பட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்ற எண்.2ல் நீதிபதி சத்யநாராயணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பிரச்சாரம் பெரியசெம்மேட்டுபட்டி, சின்னச்செம்மேட்டுபட்டி, காமராஜர் நகர், பசும்பொன் நகர், உத்தப்பநாயக்கணூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சார வாகனத்தின் மூலமாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் தொழில் தகராறு நிவாரண நிதி உதவி பெறுவது, சட்டஆலோசனை பெறுவது, சட்ட அறிவுரை பெறுவது, சட்டபிரச்சனைகளில் சுமூக தீர்வு காண்பது, பெண்களுக்கான உரிமைகள் பெறுவது, கைது செய்யப்பட்டோர் உதவி பெறுவது, வரதட்சனை கொடுமைகள் சம்பந்தப்பட்டது, மோட்டார் வாகன விபத்துக்களில் பாதிக்கப்பட்டோர் இழப்பீடு பெறுவது, ஜீவானாம்சம் பெறுவது, பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவது உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் வழக்கறிஞர் சொக்கநாதன் உள்ளிட்ட சக வழக்கறிஞர், அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் பொதுமக்களிடம் துண்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.