இந்தியாவின் தென் கோடி முனை பகுதியில் கன்னி தெய்வம் கோயில் கொண்டதால் இந்த பகுதிக்கு கன்னியாகுமரி என பெயர் வரக்காரணம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி திருவிழாவின் 9_வது நாளான இன்று(மே_22)ம் நாள் தேரோட்டம் நடைபெற்றது.

தேரோட்டத்தில் தேரின் திரு வடத்தை பிடித்து. கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம், நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான மகேஷ், குமரி மாவட்ட திருக்கேயில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், குழுவின் உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் இணைந்து தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.

பாதுகாப்பு பணியில் ஏராளமான காவல்துறையினர் மற்றும் ஹோம் ஹார்டி னரும் ஈடு பட்டிருந்தனர். நாளை(மே_23) இரவு தெப்பத்திருவிழா நடக்க இருக்கிறது.
தேரோட்டம் காரணமாக தேர் நிலைக்கு வரும் வரை கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கான படகு போக்குவரத்தை நிறுத்தி வைத்தார் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் அதிகாரி.