ஓபிஎஸ் பற்றி பேசி வரும் ஆர் பி உதயகுமாருக்கு ஓபிஎஸ் ஆதரவாளர் அதிமுக உரிமை மீட்பு குழு மாவட்ட செயலாளர் சையது கான் எச்சரிக்கை. வீட்டிற்கு இருக்கும் நாய் போன்று அதிமுகவில் இருப்பவர் ஆர்பி உதயகுமார் அவர் ஓபிஎஸ் பற்றி பேசக்கூடாது.
ஓபிஎஸ் பற்றி நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதற்கு பதிலாக இன்று தேனி மாவட்டம் போடியில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் அலுவலகத்தில் அதிமுக உரிமை மீட்பு குழு மாவட்ட செயலாளர் சையது கான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், எடப்பாடியின் அடியாள் ஆர்.பி. உதயகுமார், ஓபிஎஸ் பற்றி பேசக்கூடாது. இனியும் பேசினால் விளைவுகள் தவறாக இருக்கும். திமுகவுடன் ரகசிய தொடர்பு வைத்துக்கொண்டு பாராளுமன்ற தொகுதியில் ஸ்டாலின் நிறுத்த சொன்ன வேட்பாளர்களை பழனிச்சாமி நிறுத்தியுள்ளார். அவர் துரோகியா? ஓ.பன்னீர்செல்வம் துரோகியா? என்று கேள்வி எழுப்பினார்.
வீட்டில் வளர்க்கும் நாய் போன்று அதிமுகவில் இருப்பவர் ஆர்பி உதயகுமார் அவர் ஓபிஎஸ் பற்றி பேசக்கூடாது. வெங்கடேஷ் அதிமுக இளைஞரணி பாசறை செயலாளர் அடியாள் தான் ஆர்பி உதயகுமார். வெங்கடேஸ் உடன் அதிமுகவில் அறிமுகம் ஆனவர்தான் ஆர்.பி.உதயகுமார், அதுவரைக்கும் அவர் யார் என்று கூட தெரியாது. ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜு கட்சியின் ஆரம்பத்திலிருந்து இருப்பவர்கள் அவர்கள் கட்சியை பற்றி பேசலாம் ஆர் பி உதயகுமார் கட்சியைப் பற்றி பேசுவதற்கு இந்த தகுதி உரிமையும் கிடையாது. அதிமுகவில் பல்வேறு கட்சி நிர்வாகிகள் இருக்கும் பொழுது கோடைநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் மட்டும் அடிபடுவது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
கடந்த நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில் கோடநாடு கொலை கொள்ளை வழக்குகளை வெளியில் கொண்டு வராதது ஏன் தேர்தலின் போது ஸ்டாலின் சொல்லியிருந்தார் தற்போது வரை ஏன் வெளிகொண்டு வரவில்லை. எடப்பாடி பழனிச்சாமியும் ஸ்டாலினும் ரகசிய கூட்டணி வைத்துள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சி பாதுகாவலர் என ஆர் பி உதயகுமார் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, எடப்பாடி பழனிச்சாமியால், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா என அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். அனைவரையும் ஒருங்கிணைத்தால் தான் பாதுகாவலர் எடப்பாடி பழனிச்சாமி பாதுகாவலர் இல்லை கட்சியை பிளவு படுத்தியவர் என்று கூறினார். ஓபிஎஸ் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தான் தற்போது வரை கூறிக் கொண்டிருக்கிறார் ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ அனைவரையும் வெளியேற்றி வருகிறார்.
அதிமுக ஆட்சியில் பிஜேபி கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் பிரதமரிடம் பேசி 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்தவர் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஆட்சியில் பிஜேபியிடம் நலத்திட்டங்களை பெற்றுக் கொண்டு தற்போது அவர்களை உதறித் தள்ளி தற்போது பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி கூட்டணி வேண்டாம் என்ற சொல்லிவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி.
ஓ பன்னீர்செல்வம் பற்றி ஆதாரம் அற்ற குற்றச்சாட்டுகளை ஆர்பி உதயகுமார் கூறி வருகிறார். அதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் விளைவுகள் தவறாக இருக்கும் எனக் கூறினார்.













; ?>)
; ?>)
; ?>)