குமரி மக்களவை உறுப்பினராகவும், ஒன்றிய அரசின் இணை அமைச்சராக பொன்.இராதாகிருஷ்ணன் இருந்த காலக்கட்டமான 2018-ம் ஆண்டு. குமரி மாவட்டத்தில் பார்வதி புரம்,மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் ரூ.222_கோடி செலவில் கட்டி திறக்கப்பட்ட மார்த்தாண்டம் மேம் பாலத்தில் கடந்த(மே_6)ம் தேதி சிதைவு ஏற்பட்டதால், தொடர்ந்து கனரக வாகனங்கள் இயக்கப்பட்டால் மேம்பாலத்தில் பழுது அதிகம் ஏற்பட்டால், ஒரு வேளை பெரிய விபத்து ஏற்படலாம் என்ற முன் எச்சரிக்கையில். தேசிய நெடுஞ்சாலை துறை உடனடியாக பாலத்தின் வழியாக போக்குவரத்து முழுவதும் நிறுத்தப்பட்டு,சிதைவு ஏற்பட்ட பகுதியை செப்பனிடும் பணி தொடங்கியது.
கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் பாலத்தின் சிதைவை நேரில் பார்வையிட்டு சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சிதைவு பகுதி சீர்படுத்தும் பட்டு,தகுதி சான்றிதழ் கொடுக்கப்பட்டபின் தான் மேம்பாலத்தின் வழியாக கனரக வாகனங்கள் இயக்க வேண்டும் என பொது வெளியில் அறிக்கை வெளியிட்டதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் மனு கொடுத்தார்.
மார்த்தாண்டம் மேம் பாலம் சீரமைப்பு பணி கடந்த 12_நாட்கள் நடைபெற்ற நிலையில். துறை சார் அதிகாரிகள் பணி நடந்த பகுதியை நேரில் பார்த்து தர சான்றிதழ் கொடுத்ததை அடுத்து இன்று காலை (மே18)ம் தேதி காலை 8மணி முதல் வாகன இயக்கம் தொடங்கியுள்ளது.
மேம் பாலத்தில் இது போன்ற விரிசல்கள் வேறு பகுதிகளில் ஏற்படக்கூடாது என்பதே குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களின் பிரார்த்தனை.