திருப்புவனம் அருகே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரை, எனக்கு நிகராக இருக்கையில் அமரக்கூடாது, பதவியைப் பறித்து விடுவேன் என பல்வேறு முறைகளில் ஈடுபட்டு வரும் ஊராட்சி செயலர் மிரட்டுவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு. நடவடிக்கை இல்லையெனில் ராஜினாமா செய்யப் போவதாகவும் ஊராட்சி மன்ற தலைவர் அறிவித்துள்ளார்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முதுவன்திடல் ஊராட்சி மன்ற தலைவராக கௌரி மகாராஜன் என்பவர் இருந்து வருகிறார். முதுவந்திடல் ஊராட்சியில் செயலாளராக பணியாற்றும் அப்பகுதியை சேர்ந்த ராஜ்குமார் பல்வேறு முறைகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்ததை தொடர்ந்து அவர் கடந்த மூன்று மாதங்களாக வேறு இடத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவரது உறவினர், ஊராட்சி ஒன்றிய உதவி இயக்குனராக பணி மாறுதல் பெற்று வந்துள்ளார். இதனை அடுத்து மோசடி செய்த ஊராட்சி செயலர் ராஜ்குமார், மீண்டும் முதுவன்திடல் ஊராட்சிக்கு மாற்றம் செய்யப்பட்டார். தற்போது ஊராட்சி செயலாளர் ராஜ்குமார், ஊராட்சி மன்ற தலைவி கௌரி மகாராஜனை தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் எனக்கு நிகராக நீ இருக்கையில் அமரக்கூடாது என்றும், உதவி இயக்குனரிடம் கூறி பதவியை காலி பண்ணி விடுவேன் என மிரட்டுவதாகும், அலுவலகப் பணியாளர்களுக்கு சம்பளம், வரவு செலவுகளை ஊராட்சி செயலாளர் ராஜகுமாரே கையாளுவதாகவும் ஊராட்சி மன்ற தலைவி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்தான புகார் மனுவை முதுவந்துடன் கிராம மக்களுடன் வந்து, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார். மோசடி செய்து வரும் ஊராட்சி செயலர், ஆதிக்க அதிகாரிகளுடன் போராடி தனது பணியை செய்ய இயலவில்லை என்றும், எனவே ஊராட்சி செயலர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றவர், முடியாத பட்சத்தில் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ஊராட்சி மன்ற தலைவர் கௌரி மகாராஜன் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.