• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 4 மாத குழந்தை

Byவிஷா

May 15, 2024

பெங்களூரில் உள்ள 4 மாத குழந்தை ஒன்று படக்காட்சி மூலம் 125க்கும் மேற்பட்ட படங்களை அடையாளம் காண்பித்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருப்பது அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சாதிப்பதற்கு வயது முக்கியமில்லை என்ற பழமொழியை தற்போது 4 மாத குழந்தை நிரூபித்துள்ளது. அதாவது பெங்களூருவில் பிரஜ்வல்-சினேகா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இவான்வி என்ற 4 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு 2 மாதம் ஆனபோது அவருடைய தாயார் விளையாட்டாக 2 படக்காட்சி அட்டையை காண்பித்துள்ளார்.
அந்த அட்டையை குழந்தை சரியாக அடையாளம் காண்பித்துள்ளது. இதேபோன்று குழந்தை தன்னுடைய நினைவாற்றல் மூலம் பழங்கள், காய்கறிகள், வீட்டு பிராணிகள், பூக்கள், பறவைகள், வாகனங்கள், பல்வேறு நாடுகளில் உள்ள 10 கொடிகள் என 125-க்கும் மேற்பட்டவற்றை படக்காட்சி மூலம் அடையாளம் காண்பித்துள்ளது. இதை குழந்தையின் தாயார் வீடியோவாக எடுத்து நோபல் புக் ஆஃப் ரெகார்ட்ஸ்க்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த அந்த நிறுவனம் இவான்வி பெயரை உலக சாதனை புத்தகத்தில் இணைத்துள்ளது. மேலும் உலக சாதனை புத்தகத்தில் 4 மாத குழந்தை இடம்பெற்றது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.