• Fri. Sep 26th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

பூண்டு விலை மீண்டும் உயர்வு

Byவிஷா

May 14, 2024

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பூண்டு விலை கிலோ 350 ரூபாயாக உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையின் முக்கிய வணிக சந்தையான கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விற்பனைக்காக காய்கறி எடுத்து வரப்படுகிறது. கோயம்பேடு காய்கறி சந்தையிலிருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கும், திருவள்ளூர், காஞ்சீபுரம். செங்கல்பட்டு மாவட்டங்களுக்கும் காய்கறி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களில் ஒன்று பூண்டு. சைவம், அசைவம் என இரண்டிலுமே பூண்டின் தேவை காலத்திற்கும் மாறாதது. தமிழ்நாட்டில் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் பூண்டு பயிரிடப்பட்டாலும், மாநிலத்தின் பெரும்பான்மையான தேவையை ஈடுசெய்வதற்கு, மற்ற மாநிலங்களில் இருந்து பூண்டு இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், பூண்டின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு வரத்து வெகுவாக குறைந்ததால் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு கிலோ பூண்டு ரூ.500 கடந்து அதிர்ச்சி அளித்தது. ஏறுமுகத்தில் சென்ற பூண்டின் விலை பின்னர், படிப்படியாக குறைந்தது.
கோயம்பேடு காய்கறி சந்தைக்கு பூண்டு வரத்து மீண்டும் குறைந்துள்ளது. இதன் காரணமாக அதன் விலை மீண்டும் ஏறுமுகத்தில் சென்றுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் பூண்டு விலை ரூ.120 அதிகரித்து ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், கோயம்பேடு காய்கறி சந்தையில் நேற்று 300 ரூபாயாக இருந்த பூண்டின் விலை இன்று 350 ரூபாயாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து பூண்டு விலை அதிகரித்து வருவதால் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.