குடும்பத்துடன் இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற துப்புரவு தொழிலாளியை வழிமறித்து சாவியை பிடுங்கி ஹீரோ பைனான்ஸ் ஊழியர்கள் அடாவடியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுமக்கள் தாக்க முயன்றதால் மூன்று பேரும் தப்பி ஓடினர். தேனி அல்லிநகரம் வள்ளி நகரை சேர்ந்தவர் கணேசன் மகன் மணி பிரகாஷ் (23). இவர் தன்னுடைய மனைவி, வீரம்மாள், பாட்டி சீலா தேவி உள்ளிட்ட மூன்று பேரும் வீரபாண்டி பேரூராட்சி பகுதியில் துப்புரவு பணி முடித்துவிட்டு வீட்டில் சாப்பிட சென்றனர்,
அப்போது திடீரென பாண்டியன் பண்ணை அருகே சென்று கொண்டு இருந்தனர். அப்போது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரும், வழிமறித்து மணிபிரகாஷ் இரண்டு சக்கர வாகனத்தின் சாவியை பிடுங்கி, ஹீரோ பைனான்ஸ் ஊழியர்கள் என்று கூறி அடாவடியில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அங்கிருந்த பொதுமக்கள் அடாவடியில் ஈடுபட்ட ஹீரோ பைனான்ஸ் ஊழியர்கள் என்று கூறிய நபர்களை தாக்க முயன்றதால் அங்கிருந்து மூன்று பேரும் தப்பி ஓடினர்.