• Tue. Oct 6th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி

ByG.Suresh

May 9, 2024

மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி செங்கல்பட்டு மேல கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு அமைச்சருக்கு பாக்ஸிங் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது. இதில் 21 மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வீரர்கள் பங்கேற்றனர். இதில் தங்கப் பதக்கம் வெல்லும் வீரர்கள் பூனாவில் நடக்கவுள்ள தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர் என அறிவித்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட திரு ச. குணசீலன் தலைமையிலான 34 கிக்பாக்ஸிங்வீரர்கள் சிவகங்கை மாவட்ட சார்பாக பங்கேற்று 4 தங்க பாத்தகங்களையும் 6வெள்ளி பதக்கங்களையும் 10 வெண்கல பதக்கங்களையும் வென்றுள்ளனர். இதில் தங்கம் வென்ற இடையமேலூர் அரசு பள்ளி மாணவர்கள் நா. வசந்தன் ஜூனியர் பிரிவு, ஆ. பிரசன்யா கேடட்ஸ் பிரிவு, சிவல்பட்டி சார்ந்த க.அனுஷ்கா கேடட்ஸ் பிரிவு,மவுண்ட் போர்ட் மாணவர் ரூபன்சாய்சிவன் கேடட்ஸ் பிரிவில் தங்கம் வென்று தேசிய அளவிலான கிக்பாக்ஸிங் போட்டிக்கு தேர்வாகி தமிழ்நாடு அணி சார்பாக வருகிற 21to26 முதல் பூனே வில் விளையாட உள்ளதாக வீரர்களின் பயிற்சியாளர் ச.குணசீலன் தெருவித்தார்.