• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கோடிக்கணக்கில் பண மோசடி காவல்துறையினரிடம் புகார் மனு.

ByG.Suresh

May 6, 2024

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் சலூன் கடை நடத்தி வந்தவர் காலை ராஜன். இவரது மனைவி மைதிலி. இந்நிலையில், சலூனில் முடி திருத்தம் செய்ய சென்ற அதே ஊரைச் சேர்ந்த பிரபு என்பவரிடம் குலுக்கள் சீட்டு நடத்துவதாகவும், அதில் சேர்ந்தால், குறைந்த பணத்தில் இருசக்கர வாகனங்கள் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறிய காலை ராஜனும், அவரது மனைவி மைதிலியும் பிரபுவையும், பிரபுவின் மூலமாக அவருக்குத் தெரிந்தவர்களையும் ஆயிரத்துக்கு மேற்பட்டோரை குலுக்கல் சீட்டில் சேர்த்துள்ளனர்.

ஒவ்வொருவரும் தலா 15 ஆயிரம் ரூபாய் கட்டிய நிலையில்,குலுக்கல் நடத்தாமல்,
பணத்தை மோசடி செய்து,காலைராஜனும் அவரது மனைவியும் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டதாக ஏமாற்றப்பட்டவர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர்.
குலுக்கல் சீட்டு நடத்தி பலரிடம் கோடி கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்த சம்பவம் நாட்டரசன் கோட்டை மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.