குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற இராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல திருவிழா இன்று தொடங்கி எதிர் வரும் (மே-12)ம்தேதி பிற்பகல் 12மணி அளவில் ஆடம்பரத் தேர்ப்பவனியுடன் நிறைவடைந்ததும்,தேரிலே திருப்பலியுடன் திருவிழா நிறைவடைகிறது.

இராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலத்தில் 2000_2002 ,ஆண்டுகளில் தலைமை அருட்பணியாளராக பதவி வகித்த அருட்பணி ஆல்பர்ட் அனஸ்தாஸ் தற்போது குழித்துறை மறைமாவட்ட மேதக ஆயராக இருக்கும் நிலையில், புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலம் திருவிழா இன்று மாலை(மே_3)ம்தேதி முன் இரவு 7.30-க்கு தொடங்கிய நிலையில், இன்று திருவிழாவின் முதல் நாள் திருக்கொடியை குழித்துறை மறை மாவட்டம் மேதகு ஆயர். ஆல்பர்ட் அனஸ்தாஸ் திருக்கொடியை இயற்றி வைத்ததுடன்,திருப்பலியையும் நிறைவேற்றினார்.

இராஜாவூரை சேர்ந்த மண்ணின் மைந்தர்களான அருட்பணியாளர்கள்
அருட்பணியாளர்கள். கார்மல்.
இக்னேஷியஸ்
ஜாண் குழந்தை
ஜாண் அமலநாதன்
பிரான்சிஸ் சேவியர்
தேவதாஸ்
ஜோசப் காலின்ஸ்
ஜேசுதாசன்
குருசு கார்மல்
சகாய ஆனந்த்
மைக்கேல் ஜார்ஜ் பிரைட்
ஜார்ஜ் கிளமெண்ட்
திவ்வியன். ஆகிய மண்ணின் மைந்தர்கள் இணைந்து மறையுரை மற்றும் திருப்பலியை நிறைவேற்றுகின்றனர்.

இராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலம் பங்கு இறைமக்கள், அருட்சகோதரிகள், பங்கு அருட்பணி பேரவை மற்றும் பங்குத்தந்தையர்கள் இணைந்து விழாவின் 10 நாட்கள் தேவாலயம் இறைப்பணியை ஒன்றிணைத்துள்ளார்கள்.