• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இருசக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

ByJeisriRam

Apr 24, 2024

தேனி மாவட்டம் போடியில் டி.வி.கே நகர் பகுதியில் இரண்டு இருசக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த நபர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போடி நகர போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் போடி டி வி கே கே நகர் பகுதியில் வசிப்பவர் மதன்குமார் இவர் தனது tn60 ay 42 22 என்ற பல்சர் பைக்கை தனது வீட்டின் முன்பாக நிறுத்தி இருந்தார் அருகில் சேதுராம் என்பவரது டிஎன் 60 ay 88 97 பல்சர் பைக்கும் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் நள்ளிரவில் 1:30 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் இரண்டு பல்சர் பைக்குகள் தீயில் எரிந்து நாசம் அடைந்தது. இதை அடுத்து மதன்குமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போடி நகர போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பைக்கில் வந்து தீ வைத்து விட்டு தப்பி சென்ற இரண்டு மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர் நள்ளிரவில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.