• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சவாலான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றி – கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாதனை!

BySeenu

Apr 22, 2024

சவாலான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை 1.5 வயது குழந்தைக்கு வெற்றிகரமாக செய்து கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாதனை செய்துள்ளனர்.

குழந்தைகளுக்குக் கல்லீரல் செயலிழப்பை ஏற்படுத்தும் பிலியரி அட்ரேசியா எனப்படும் பிறவி நோயால் பாதிக்கப்பட்ட 1 1/2வயது குழந்தைக்கு ‘கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை” கோவை ஆவாரம்பாளையத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா பல்நோக்கு மருத்துவமனையானது, வெற்றிகரமாக செய்து மருத்துவத்தில்புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனுபவம் வாய்ந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள், குழந்தைகள் மயக்க மருந்து நிபுணர் மற்றும் பச்சிளம் குழந்தைக்கான தீவிர சிகிச்சை நிபுணர்களைக் கொண்ட குழு இச்சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர். இந்த சிகிச்சைகளுக்கான நவீன உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மருந்துவமனையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மூளைச்சாவு அடைந்த பெரியவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட முழுக் கல்லீரலும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, முழு கல்லீரலும் 11/2வயது குழந்தைக்கு பொருந்தாது என்பதால் ஒரு சிறிய பகுதி குழந்தைக்கும், கல்லீரல் செயலிழந்த மற்றொருவருக்கும் பெரிய பகுதி கல்லீரய் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மூளைச்சாவு அடைந்தவர் ஒரே நேரத்தில் கல்லீரல் செயலிழந்த 2 உயிர்களைக் காப்பாற்றியதோடு உடல் உறுப்புதானத்தின் தாக்கத்தை அதிகப்படுத்தியுள்ளார்.

மருத்துவமனையின் கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழந்தையின் பெற்றோர் தங்கள் கல்லீரலின் ஒரு பகுதியைத் தானம் செய்ய இயலாது எனப் பரிசோதனைகள் மூலம் கண்டறிந்தனர். பின்பு மூளைச்சாவு அடைந்தவரின் கல்லீரல் மூலம் குழந்தைக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.தற்போது குழந்தை குணமடைந்து திருச்செங்கோடு அருகே உள்ள தனது கிராமத்தில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளது. இந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து, குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவ குழுவினரை SNR அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு D. லட்சுமிநாராயணஸ்வாமி தலைமை நிர்வாக அதிகாரி, மருத்துவ இயக்குவர் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் ஆகியோர் பாராட்டினார்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கல்லீரல் மாற்றுச் சிகிச்சை சேவைகளை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை வழங்குகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நோயாளிகளுக்கு உயிர் காக்கும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை இளி உலகத் தரத்திற்கு நிகராக இலவசமாக பெற சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு செல்லாமல் இங்கேயே மேற்கொள்ள முடியும் என்பதை மருத்துவமனை நிர்வாகம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.