• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பல்லடம் அருகே அதிகாலையில் பயங்கர விபத்து!!

ByS.Navinsanjai

Apr 21, 2024

பல்லடம் அருகே அதிகாலையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஈச்சர் வேனின் பின்புறம் கார் மோதி விபத்து ஏற்பட்டு 6 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த ஆனந்த்,கௌதம்,கவின்,குமரன், சங்கீத் உள்ளிட்ட 6 பேர் கோவை சாலையிலிருந்து பல்லடம் நோக்கி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது காரணம்பேட்டை கோடங்கிபாளையம் பகுதியை கிடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த ஈச்சர் வேனில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

இதனையடுத்து இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் அங்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கி இருந்த ஆறு பேரை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பல்லடம் போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த விபத்தில் சங்கீத் என்பவர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் தற்போது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பல்லடம் அருகே அதிகாலையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஈச்சர் வேன் மீது கார் மோதிய விபத்தில் ஆறு பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.