• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வாக்கு பதிவு செய்ய வந்தவரை இறந்து விட்டதாக கூறியதில் அதிர்ச்சி

ByJeisriRam

Apr 19, 2024

போடிநாயக்கனூரில் உயிருடன் வாழ்ந்து வருபவரை உயிருடன் இல்லை என்று கூறிவாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்களிக்க அனுமதி மறுத்தனர்.

நகராட்சி பட்டியலில் உயிரோடு இல்லை என்று குறிப்பிட்டுள்ளதாக கூறி, வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த வாக்காளர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் டிஎஸ்பி அலுவலகம் எதிரில் உள்ள டி.வி.கே நகர் பெரிய பள்ளிவாசல் அருகில் வசித்து வருபவர் சந்திரன்(58), தோட்ட காவலாளியாக வேலை பார்த்து வரும் இவருடைய வீட்டில் தேர்தல் பணியாளர்கள் வாக்கு அனுமதிச்சீட்டு வழங்கி விட்டு சென்றுள்ளனர்.

வாக்குச் சீட்டை எடுத்துக்கொண்டு, தனது வாக்காளர் அடையாள அட்டையையும் எடுத்துக்கொண்டு தனது வார்டு போடி ஊராட்சி வாக்கு சாவடியில் வாக்களிக்க சென்ற சந்திரனுக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கே நீங்கள் இறந்து விட்டீர்கள் என தெரிவித்தவுடன் அதிர்ந்து போன சந்திரன் நான் உயிரோடு தானே இருக்கிறேன் என கூறி வாக்களிக்க அனுமதி கேட்டுள்ளார். ஆனால் பூத் ஏஜெண்டுகள் பூத்தை விட்டு வெளியே அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் வெளியே அனுப்பி உள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரன் நகராட்சி அலுவலகத்திற்கு சென்ற பொழுது அங்கு பணியாளர்கள் தேர்தல் பணிகளுக்காக சென்று விட்டதாக கூறி அங்குள்ள நபர்கள் அவரை திருப்பி அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சல் அடைந்த சந்திரன் வாக்களிக்காமல் மன வருத்தத்துடன் வேலைக்கு சென்று விட்டார். நான் உசுரோடு தான் இருக்கிறேன் தேர்தல் அலுவலர்கள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

உயிருடன் இருக்கும் வரை இறந்து விட்டதாக கூறி வாக்களிக்க அனுமதி மறுத்தது குறித்து, இவர் மட்டுமல்ல, இவரது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.