• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Apr 18, 2024

என் குணம் என் எதிரில்
நிற்பவனின் குணத்தை
பொறுத்தது..!

வாழ்க்கை என்பது யாதெனில்
வாழ வேண்டுமா என்று
சில நேரமும்.. வாழ்ந்தே
ஆக வேண்டும் என்ற பல நேரமும்
சேர்ந்த கலவையே..!

சோகம் மட்டும் வாழ்க்கை
கிடையாது.. சந்தோஷமாகவே
எந்நாளும் வாழ்ந்திடவும் முடியாது..
சிமிட்டும் நம் இமைகள் ஒரு நொடி
இருட்டினால் தான் நம்மால்
பல நொடி வெளிச்சத்தில்
வாழ முடியும்..!

இலக்குகளை குறி வை..
இல்லையெனில் கேள்விக்குறி
ஆகிவிடும் வாழ்க்கை..!

நம் வாழ்க்கை அடுத்தவர் திரும்பி
பார்க்கும் அளவிற்கு
இருக்க வேண்டுமே தவிர…
திருத்தி பார்க்கும் அளவிற்கு
இருத்தல் கூடாது..!