• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சக்கம்பட்டியில் முத்துமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

ByI.Sekar

Apr 16, 2024

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டியில் பழமைவாய்ந்த இந்துசமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட முத்துமாரியன் திருக்கோவிலில் கொடியேற்று விழாவுடன் சித்திரை திருவிழா தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்று, வேத அர்ச்சகர் மந்திரம் முலங்க,கோவில் முன்பாக உள்ள கொடிமரத்தில் முத்துமாரியம்மன் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கொடிமரத்தை தரிசனம் செய்தனர். தொடர்ந்து வரும் 23ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை அம்மன் சிம்மவாகனம் ,அன்னவாகனம், முத்துப்பல்லக்கு உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். உச்சகட்ட நிகழ்ச்சியாக பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சியும், புஷ்ப பல்லக்கில் அம்மன் பவனிவரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. வரும் 27 ஆம் தேதி கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடைபெற்று மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது. இவ்வறிவிப்பு சமய அறநிலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.