• Sat. Sep 26th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கீழே விழுந்த அரசுப்பேருந்து படிக்கட்டு; பீதியடைந்த பயணிகள்

ByBala

Apr 15, 2024

விருதுநகர் மாவட்டத்தில் அரசு பேருந்தில் படிக்கட்டு கீழே விழுந்த சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இன்று முடங்கியாறு சாலையில் உள்ள தனியார் கல்லூரி வரை அரசுப்பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்து ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே வந்த போது, பேருந்தின் பின்பக்க படிக்கட்டு திடீரென விழுந்தது. இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார்.

பேருந்தின் படிக்கட்டில் யாரும் இல்லாததால் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்ப்படுத்தியுள்ளது.