• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Apr 15, 2024

நற்றிணைப்பாடல் 359:

சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டுச் சேதா
அலங்கு குலைக் காந்தள் தீண்டி, தாது உக,
கன்று தாய் மருளும் குன்ற நாடன்
உடுக்கும் தழை தந்தனனே; யாம் அஃது
உடுப்பின், யாய் அஞ்சுதுமே; கொடுப்பின் கேளுடைக் கேடு அஞ்சுதுமே; ஆயிடை
வாடலகொல்லோ தாமே – அவன் மலைப்
போருடை வருடையும் பாயா,
சூருடை அடுக்கத்த கொயற்கு அருந் தழையே?

பாடியவர்: கபிலர் திணை :

பொருள்:

மலையின் மேய்ந்த சிறிய கொம்பையுடைய செவ்விய பசு; அசைகின்ற குலையையுடைய காந்தளைத் தீண்டி அக் காந்தண் மலரிலுள்ள தாதுக்கள் தன்மேல் உதிரப் பெற்றதனாலே நிறம் வேறுபாடுடைமை நோக்கி; அதன் கன்று தன் தாயென் றறியாமல் மயங்காநிற்கும் மலைநாடன், உடுக்கும் தழை தந்தனன் அவை உடுத்திக் கொள்ளுந் தழையைக் கையுறையாகக் கொடுத்தனன், அவற்றை எம் நாட்டினர் உடாராதலின், யாம் உடுப்பின் யாய் அஞ்சுதும் யாங்கள் மட்டும் உடுத்திக்கொள்ளின் அன்னை கேட்டற்கு யாது விடை சொல்ல வல்லேமென்று அஞ்சாநிற்பேம்; அத் தழையுடையை மீட்டும் தலைவன்பாற் கொடுத்துவிடின் அதனால் அவன்படும் ஆற்றாமைக்கு அஞ்சாநிற்பேம்; ஆகிய அவற்றிடையே அவனது மலையிலுள்ள போரைச் செய்தலையுடைய வரையாடும் பாய்ந்து செல்லாத; தெய்வம் இருக்கின்ற மலைப் பக்கத்தின்கண்ணே உள்ள கொய்தற்கரிய தழைதாம்; வாடுதலுடைய ஆகலாமோ?