• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நாமக்கல் வாகன சோதனையில் கோடிக்கணக்கில் சிக்கிய பணம்

Byவிஷா

Apr 13, 2024

நாமக்கல்லில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையின் போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.83கோடியிலான பணம் கட்டுக்கட்டாக சிக்கியிருப்பது அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. . தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் அன்பளிப்புகள் கொடுக்கப்படுவதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பறக்கும் படை மற்றும் நிலையான தேர்தல் அதிகாரிகளால் இதுவரை சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் தமிழ்நாட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாமக்கல் மாவட்ட பரமத்தி வேலூர் காவிரி பாலம் அருகே உள்ள சோதனை சாவடியில் நேற்று இரவு முதல் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டர். அப்போது அவ்வழியாக வந்த காரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
அந்த காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.2.83 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அந்த பணம் இந்தியா ஒன் ஏடிஎம்.க்கு உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் எடுத்துவரப்பட்டது தெரியவந்தது.