• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கருங்குளம் கண்மாய் ஷட்டர் உடைந்து பயிர்கள் நாசம் – அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

ByIlaMurugesan

Nov 7, 2021

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா பட்ட சித்தரேவு ஊராட்சி நெல்லூர் பகுதியிலுள்ள கருங்குளம் கண்மாய் ஷட்டர் உடைந்து குளத்தின் அருகில் உள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட கரும்பு, வாழை, நெல் போன்ற பயிர்கள் தற்போது நீரில் மூழ்கி வருகின்றன.

இப்பகுதி மக்கள் காலை முதல் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தும் இதுவரை எந்த அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்றும், மேலும் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து வரும் தண்ணீர் குளத்திற்கு வருவதாலும், அதிகளவு தண்ணீர் தற்போது வயல்வெளிகளில் வந்து கொண்டுள்ளது. மேலும் தொடர்ந்து மழை நீடித்தால் இப்பகுதியில் மட்டும் அல்லாமல் அருகில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பயிரிட்ட விவசாய நாசமாகும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளார்.