• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அகில இந்திய சிகை மற்றும் அழகுக் கலை சங்கத்தின் மாநில தலைவர் பொறுப்பேற்கும் விழா

Byகுமார்

Apr 1, 2024

மதுரை தனியார் விடுதி அரங்கத்தில் அகில இந்திய சிகை மற்றும் அழகுக் கலை சங்கத்தின் மாநில தலைவர் பொறுப்பேற்கும் விழா நடைபெற்றது. இதில் அகில இந்திய தேசிய செயலாளர் அந்தோணிடேவிட் தலைமையில் ஷீனாமினி தமிழ்நாட்டின் அகில இந்திய சிகை மற்றும் அழகுக் கலை சங்கத்தின் மாநிலத் தலைவராக பொறுப்பேற்றார். இவ்விழாவில் கலக்கப்போவது யாரு புகழ் பாலா மற்றும் அகில இந்திய சிகை மற்றும் அழகுக் கலை சங்கத்தின் மாநில தலைவர்கள் சுதா, ஆதிலட்சுமி ஜெயஸ்ரீ, மற்றும் மாவட்டத் தலைவர்கள் கார்த்திகா, நிர்மலாதேவி, அருணாஅருன், ரெகிதா, தங்கேஸ்வரி மற்றும் பொருளாளர் கஞ்சணா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும் இந்த விழாவில் மதுரை, திருநெல்வேலி சேலம், கோயம்புத்தூர் சுருரகநாமக்கல். திருச்சி நாகர்கோயில் கோவில்பட்டி தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் அகில இந்திய சிகை மற்றும் அழகுக் கலை சங்கத்தின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றார்கள் இவ்விழாவில் அழகு கலையில் சிறந்து விளங்கிய அழகு கலை நிபுணர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன் மற்றும் அழகு கலை சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டது பின்ன செய்தியாளர் சந்திப்பில் புதிதாக பொறுப்பேற்ற தலைவர் சீனா மினி செய்தியாளர் சந்திப்பில் தனது கோரிக்கைகளை கூறினார்.

அழகு கலை நிபுணர்கள் அனைவரையும் நல வாரிய நலத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். அழகு கலை நிபுணர்களுக்கு அரசின் மானிய கடனுதவி செய்து தரப்பட வேண்டும். அழகு கலை படிப்பிற்கான கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும். நலிந்த அழகு கலை உறுப்பினர்களுக்கு உதவித் தொகைகள் அரசின் சார்பாக வழங்கப்பட வேண்டும்.