• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வேட்டாளர்களிலே அதிக வாக்கு வித்தியாசத்தில் மாணிக்தாகூர் வெற்றி பெற வேண்டும்-அமைச்சர மூர்த்தி

ByN.Ravi

Mar 31, 2024

நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பின் விடுபட்ட அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்க அமைச்சர் உறுதி அளித்தார்.
விருதுநகர் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு,
திருப்பரங்குன்றம் சரவண பொய்கை அருகே ,இந்தியா கூட்டணி சார்பில் நடை பெற்ற விருதுநகர் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவு தெரிவித்து செயல் வீரர்கள் கூட்டம் நடை பெற்றது.
கூட்டத்திற்கு, மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார், இளைஞரணி மாவட்ட செயலாளர் விமல் வரவேற்புரை கூறினார். மாவட்ட துணை செயலளார் பாலாஜி முன்னிலை வகித்தார்.
பின்னர், செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் முர்த்தி பேசியதாவது:
இப்போது, வேட்பாளராக இருந்து நாளை நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்ல இந்திய கூட்டணி அங்கே அமைச்சரவை அமைக்கிற போது அதன் அமைச்சராகவும் இருப்பார் என்பதில், எந்த மாற்றமும் இல்லை . கழகத் தலைவரும் தமிழக முதல்வரின் அன்பைப் பெற்ற வேட்பாளராக இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் அன்னை சோனியா அவர்களிடம் இளம் தலைவர் ராகுல் ஆதரவற்ற வேட்பாளர்.
அதேபோல, இந்தியா கூட்டணியில் இருக்கக்கூடிய நம்முடைய கட்சியினுடைய கூட்டணி உடைய வேட்பாளருமான அருமை மாப்பிள்ளை மாணிக்கம் தாகூர் மீண்டும் நாடாளுமன்ற வேட்பாளராக வெற்றி பெற “கை சின்னத்தில் ” வாக்களித்து மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும்.
இக்கூட்டத்தில், கலந்து கொண்ட கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளே.

உங்கள் அனைவருக்கும் என்னுடைய முதற்கண் நன்றி கலந்த வணக்கம் இன்றைக்கு விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தளவில் எப்போதுமே நம்மளோட மக்களோடு மக்களாக மட்டுமல்ல நம்முடைய மண்ணுக்கு சொந்தக்காரர் இந்த மதுரை மண்ணுக்கு சொந்தக்காரர் தான் மாணிக்க தாகூர்.
கடந்தமுறை வேட்பாளராக அறிவித்தபோது, வட நாட்டு காரர போட்டுட்டாங்க.
தமிழ் பற்றினுடைய காரணமாக தமிழ் ஆர்வம் காரணமாக அவருக்கு அந்த பெயரை வைத்தார்கள்.
மக்களோடு ஒரு சுமுகமான உறவோடு எந்த அளவிற்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை நான் தொடர்ந்து பார்த்து இருக்கோம்.
இப்ப வேட்பாளராக அறிவிச்ச உடனே முதல் செயல் கூட்டம் விருதுநகர் நாடாளுமன்ற
மாக இருந்தாலும் நம்ம எப்பவுமே திருப்பரங்குன்றம் அந்த முருகனுடைய அருளால் அவருடைய ஆசிர்வாதத்தால் தான் இந்த பணியை எங்கே தொடங்குவோம். உங்களுக்கெல்லாம் தெரியும் கடந்த சட்ட மன்ற இடைத்தேர்தலில்
எப்படிடா ஜெயிக்கப் போறாங்கன்னு சொன்னாங்க நாங்க எப்படியும் மக்களுடைய செல்வாக்கோடு இந்த முருகன் அருளால் ஜெயிப்போம்.
தமிழ்நாடே எதிர்பார்க்கல அப்படி ஒரு புண்ணியவான இடைத்தேர்தல்ல இந்த மண்ணுல இருந்து ஆரம்பிச்சு ஜெயிக்க வச்சுடுவோம்.
இது நாடு முழுவதும் தெரியும் இந்த திருப்பரங்குன்றம் மக்களுக்கு நல்லாவே தெரியும் அப்படிப்பட்டவரை தவறுகளை தட்டி கேட்க நிச்சயமாக ஜெயிக்க வைங்க.
மகளிர் உரிமை தொகை போய் எவ்வளவு பேர் வாங்கி இருக்கீங்க அவ்வளவு பேரும் தூக்கினாலும் கொஞ்சம் பேரு மகளிர் உரிமை தொகை வாங்கல.
அதைத்தான் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர், மதுரையில் இருந்த போது முதன் முதலில் அவருடைய இந்த தேர்தல் பிரச்சாரத்தை திருச்சுழியில் ஆரம்பித்தோம்.
அவருடன் நான் வாகனத்தில் செல்கிற போது, அமைச்சர் அவர்களே நம்முடைய மகளிர் கலைஞர் உரிமைத்தொகை என்பது தகுதியுள்ள அத்தனை மக்களும் பெறவேண்டும்.
அதை ஈசேவை மையத்திலிருந்து சிலசில குறைபாடுகள்னால அதை ரிஜெக்ட் பண்ணி இருக்காங்க அப்படி பண்ண கூடாது எல்லா மக்களும் நம்மளுக்கு பெறணும் அதுதான் நமக்கு பெரிய மனநிறைவா இருக்கும் .
அதுக்கு ஒரு 700 கோடி கூட ஒரு பரவால்ல ஒட்டுமொத்தமாக திராவிட மாடலா ஆட்சி நடத்திக் கொண்டிருக்க கூடிய நம்முடைய தமிழர்கள் முதல்வர் ஆட்சியில் யாரும் கிடைக்கவில்லை என்ற நிலைமை இருக்கக்கூடாது என்று சொன்னேன் அதை ஏற்றுக்கொண்டு நம்முடைய அமைச்சர் அவர்கள் தேர்தல் முடிந்ததற்கு பின்னால் அது ஆய்வு செய்து தகுதியுள்ள அத்தனை பேருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை நிச்சயமாக கிடைக்கும் என்ற இந்த உத்தரவாசத்தை அவரோடு அனுமதியோடு நான் இங்கே சொல்லிக் கொள்கிறேன் .
இதை சொல்வதற்கு காரணம் மக்களுடைய பொருளாதார முன்னேற வேண்டும் பொருளாதார முன்னேற்றத்திற்காக தான் எதுவுமே இல்லாம இந்த மூணு வருஷத்துல ஏறத்தாழ 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மகளிர் செய்து கொடுத்
திருக்கிறார்.
அதனால, பல குடும்பங்கள் இன்றைக்கு சுகமாக தொழில் செய்து பொருளாதாரத்
தில் முன்னேற அரசு செயல்படுத்தியது.
ஏழை எளிய மக்களின் பிள்ளைகள் எல்லாம் காலேஜ்ல படிக்க வைக்க
வேலைக்கு போகும் பெண்கள் காலையில ஏழு மணிக்கு போகணும் ஏழு மணிக்கு போனோம்னா என்ன பிள்ளைகளை குழந்தைகளை குளிப்பாட்டி சாப்பிட்ட வைத்து வேலைக்கு போகணும்னு ஒரு கட்டாயத்தில் இருந்த காரணத்தினால் அவர்கள் முழு கவனத்தை செலுத்த முடியாது.
பிள்ளைகளுக்கு காலையில் நீ சமைக்க வேணாம் நாங்க உங்க குழந்தை ளுக்கு சாப்பாடு போடறேன்னு சொல்லி அந்த காலை உணவு திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார் முதலமைச்சர்.
அனைத்து மகளிர் முழுமையாக பஸ்ஸில் செல்வதற்கு இலவச பேருந்துகள்.
அதுவும் குறிப்பாக, பெண்களுடைய முன்னேற்றத்திற்காகவே, திட்டங்களை செய்து கொண்டிருக்க கூடிய நம்முடைய முதலமைச்சர் அவர்கள் உங்கள் தொகுதியில் முதல்வர் மக்கள். முதல்வர் இன்றைக்கு எதைக் கொடுத்தாலும் எதை உடனடியாக கொடுத்தாலும் அதை தீர்வு கண்டு கொண்டிருக்கிறார் எனவே, இன்றைக்கு இந்தியா கூட்டணிக்கு ஒரு மிகப்பெரிய தலைவராக உறுதுணையாக இருக்கக்கூடிய நம்முடைய முதலமைச்சர் நாடாளுமன்றத்தினுடைய வெற்றி வேட்பாளர் மாணிக்கம் தாகூர். அவர்களுக்கு நீங்கள் “கை சின்னத்தில் ” அமோக வெற்றி பெற நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் தொகுதிகள் தான் பார்க்க வேண்டும்.
மக்களுடன் வாக்காளருடன் தினந்தோறும் அந்தபகுதியில் பணியில் ஈடுபடுகிறபோது நிச்சயமாக ஆறு தொகுதி முதல் தொகுதியாக திருப்பரங்குன்றம் என்பது எந்த விதமான மாற்றமும் இல்லை. அவர் சொல்லிய வார்த்தை 50 ஆயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்று இருக்கிற வேட்பாளர்களில் முதலிடத்ததை பிடிப்பது மாதிரி இருக்க வேண்டும் என்று சொல்லி நிறைவு செய்கிறேன் என, அமைச்சர் மூர்த்தி கூறினார்.