• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் பண்டிகையையொட்டி, கோவையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

BySeenu

Mar 31, 2024

கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் திருநாள் பண்டிகையையொட்டி, கோவையில் பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாட்டுடன் கூடிய ஈஸ்டர் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய தவக்காலம் 40 நாட்கள் அனுசரிக்கப்பட்டு இயேசு கிறிஸ்து புனித வெள்ளி அன்று மரித்து மூன்றாவது நாளான ஞாயிறு அன்று உயிர்த்தெழும் நிகழ்வை ஈஸ்டர் என அழைக்கப்படும், இயேசு உயிர்ப்பு விழாவை உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.இதனையொட்டி கோவையில் பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு , சிறப்பு நடு இரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.இதில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.இதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் ஆயர் டேவிட் பர்ணபாஸ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தேவனை துதித்தார்கள், அதன்பின் ஒருவருக்கு ஒருவர் தங்களது ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.