• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொன் ராதாகிருஷ்ணன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்து, குமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டி..,

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று தமிழக கேரள எல்லை பகுதியான கொல்லங்கோடு பகுதியில் கொல்லங்கோடு பகவதி அம்மன் கோயிலில் இருந்து காலை 9 மணிக்கு தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கி உள்ளனர்.

கொல்லங்கோடு பகவதி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்தி தரிசனம் மேற்கொண்ட பின் திறந்த வாகனத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்.

தொடர்ந்து பேட்டி அளிக்கையில்..,

1999 – ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தபோது தெரியவில்லையா? பாஜகவில் பாசிசம் உள்ளது என்று குமரி பாராளுமன்ற பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி.,

குமரி மாவட்டத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள வளர்ச்சி திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் – புதிய திட்டங்களை கொண்டு வர வேண்டும் முழு நேர பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட வேண்டும் என்றும்,டம்மி பாராளுமன்ற உறுப்பினர் இந்த தொகுதிக்கு ஆகாது என்றும், பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவரை இரண்டு அரை வருடங்களாக காணவில்லை .எந்த வேலைகளும் செய்யவில்லை இதனால் நான்கு வழி சாலை பணி கிடப்பில் உள்ளது.நான் வெற்றி பெற்றால் வருகின்ற டிசம்பர் மாதத்துக்குள் நான்கு வழி சாலை பணிகளை முழுமையாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவேன்.அதேபோன்று 4,000 கோடி செலவில் கொண்டு வரப்பட்டுள்ள இரட்டை இரயில் பாதை வேலையை முடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வருவேன்.

பிரதமர் மோடி தமிழகத்திற்கு அடிக்கடி வருவது தமிழகத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் ,ஒவ்வொரு முறை வரும் போதும் அவர் தமிழகத்திற்கு ஒவ்வொரு முறை வரும்போதும் ஏராளமான வளர்ச்சி திட்டங்களை தமிழகத்திற்கு தந்து சென்றுள்ளார்.

1999 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது நாங்கள் திமுகவுடன் கூட்டணி வைத்தபோதும் அப்போது பாசிசம் இருந்ததற்கான வாய்ப்புகள் உண்டு. 2004-ம் ஆண்டு வரை அவர்கள் எங்களுடன் இருந்தார்கள். அப்போது பாசிசம் இருந்ததற்கான வாய்ப்புகள் உண்டு.

அவர்கள் இருந்த காலம் பாசிசம் மட்டும் தான் அப்போது அந்த வேளையில் கலைஞர் சொன்னார். கூடா நட்பு கேடாய் முடியும். அதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்திருப்பது தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய கேடு. எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரப்படுவதற்கான எல்லா நடவடிக்கைகளும் செய்யப்பட்டு வருகிறது. அந்த மருத்துவமனையில் ஏராளமான மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு பயின்று வருகின்றனர் .

மருத்துவ கல்லூரிகள் கட்டுவதற்கு கால அவகாசம் என்பது தேவைப்படும் குமரி மாவட்டத்தில் நான் வெற்றி பெற்றால் நிச்சயமாக மீனவர்களின் நெடுநாள் கோரிக்கையான ஹெலிகாப்டர் தளம். ஆம்புலன்ஸ் வசதியுடன் கூடிய கப்பல் அதுவும் இரண்டு ஆண்டுகளுக்குள் அமைக்கப்படும்.

தேர்தல் பத்திர விவாரத்தில் முறையற்ற எதுவும் வாங்கவில்லை முறையாகத்தான் வாங்கியிருக்கிறோம். ஒரு மாநிலத்தில் லாட்டரி சீட்டு கம்பெனியில் இருந்து எவ்வளவோ வாங்கியுள்ளார்கள் அதை ஒப்பிட்டு பார்க்கும்போது இது ஒன்றும் இல்லை.

மத்தியில் 400 -க்கு மேற்பட்ட இடங்களிலும் தமிழகத்தில் 39 இடங்களிலும் வெற்றி பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம் என்று அவர் கூறினார்.

அகில இந்திய மகளிர் அணி தலைவியும் கோவை எம் எல் ஏ யுமான வானதி சீனிவாசன் பிரச்சாரத்தில் கலந்து கொண்டார்.