• Fri. Dec 5th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

விசைத்தறி கூலி தொழிலாளி கல்லால் தாக்கி கொலை – குற்றவாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு….

ByNamakkal Anjaneyar

Mar 20, 2024

பொது குடிநீர் குழாயில் நீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக குடிபோதையில் விசைத்தறி கூலி தொழிலாளி கல்லால் தாக்கி கொலை குற்றவாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு….

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள தட்டாங்கொட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டன்கோவில் பகுதியில் மயிலம்பாடிக்காரர் என்பவர் வீட்டில் வசிப்பவர்கள் சுப்பிரமணி 45 மோகன்ராஜ் 42 இருவரும் விசைத்தறி கூலி தொழிலாளர்கள். இவர்களுக்கு பொதுவாக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் குழாயில் நீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சுப்பிரமணி வீட்டு முன்பு இருந்த செடியை யாரோ பிடுங்கி விட்டார்கள். இதனாலும் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மோகன்ராஜ் அவரது நண்பர்களும் மது அருந்தி விட்டு ஒட்டன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே நள்ளிரவு நேரத்தில் வரும் பொழுது அங்கே சுப்பிரமணி நின்று கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனால் குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது மோகன்ராஜ் மற்றும் அவரது நண்பர்களும் சுப்பிரமணியை அடித்து இழுத்துச் சென்றவர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வாய்க்காலில் தள்ளிவிட்டு சுப்பிரமணியின் தலைமீது கல்லால் தாக்கியுள்ளனர். இதில் சுப்ரமணி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார். அதிகாலை வரை கணவன் வீடு திரும்பவில்லை என சுப்பிரமணியின் மனைவி கவிதா குமாரபாளையம் காவல் நிலையத்தில் தனது கணவர் காணவில்லை என புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது வாய்க்கால் பகுதியில் சுப்பிரமணி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உடனடியாக போலீசார் சடலத்தை கைப்பற்றி குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து தலை மறைவான மோகன்ராஜ் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.